ஸ்டஃப்டு வெங்காயம்

Loading...

ஸ்டஃப்டு வெங்காயம்

வெங்காயம் – 2,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
பொடி செய்ய…
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 5,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
கடாயில் 1/2 டீஸ்பூன் எண்ணெயை காயவைத்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்தமிளகாய், வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆறவைத்து உப்பு சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். வெங்காயத்தை நான்காக நறுக்கி, அரைத்த பொடியை வெங்காயத்தினுள் ஸ்டஃப்டு செய்து வைக்கவும். மீதியுள்ள பொடியை தனியாக வைக்கவும். மற்றொரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து, வெங்காயம் வைத்து மூடி 8-10 நிமிடம் வைத்து ரோஸ்ட் ஆன பின் மீதியுள்ள பொடி சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். ரொட்டி, புல்கா, பூரி, நாண், புலாவுடன் பரிமாறலாம்.

Loading...
Rates : 0