வெஜிடபிள் இடியாப்பம்

Loading...

வெஜிடபிள் இடியாப்பம்

இடியாப்பம் – 1 கப்,
வெங்காயம் – 1,
காய்கறிகள் (பீன்ஸ், பட்டாணி, குடைமிளகாய்) – 1/2 கப்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
லெமன் ஜூஸ் – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன்.
தாளிக்க…
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.

எப்படிச் செய்வது?
இடியாப்பத்தை லேயர்களாக பாத்திரத்தில் அடுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும்வரை வதக்கி, காய்கறிகள் சேர்த்து 3-4 நிமிடங்கள் வேகவைக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
இதில் லெமன் ஜூஸ், கரம்மசாலா, சர்க்கரை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவும். பின் இடியாப்பம் ஒரு லேயர் வைத்து அதன்மேல் சிறிது காய்கறி கலவையை பரத்தி மீண்டும் அதன்மேல் ஓர் இடியாப்ப லேயரை வைக்கவும். இதுபோல் இடியாப்பம், காய்கறி கலவையை அடுக்காக வைத்து சூடாக சட்னி, தயிருடன் பரிமாறவும்

Loading...
Rates : 0