வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்

Loading...

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்

வாழைப்பழம் மனிதனின் மூளைக்குத் தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), ஃபிரக்டோஸ் (Fructose), குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது.

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தைக் கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்த்தடுப்பு நாசினியும்கூட. ஆகவே இதை நாம் தினமும் உண்ண வேண்டும்.
மூளை வலிமை: காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்துக் கொடுத்துச் சோதனை செய்து பார்த்தபோது மாணவர்களின் மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மலச்சிக்கல் : உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான ஃபைபர் இருப்பதால் உங்கள் குடலைச் சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியைச் சுத்தமாகப் போக்கிவிடுகிறது.
மந்தம் : நம்முள் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழுந்துவிட்டால்கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக்கொள்வார்கள். வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடிக்க வேண்டும்.
வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர்ச் சத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைப் போக்கிவிடுகிறது.
நெஞ்செரிப்பு : உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்புச் சக்தி இருப்பதால் வாழைப்பழத்தைத் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டுப் பறந்துவிடும்.
உடல் பருமன் : ஆஸ்திரியாவில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்த 5000 நோயாளிகளுக்கு வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்தார்கள்.
பின்னர் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு நிலைத்தன்மைக்குக் கொண்டு வந்து அதன்மூலம் அவர்களது உடல்பருமன் குறைவதாகத் தெரிவிக்கின்றார்கள்.
குடற்புண் : வாழைப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமலும் காக்கிறது.
சீரான வெப்பநிலை: வாழைப்பழத்திற்குக் குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தைச் சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்பநிலை சீராக உள்ளது.
மன அழுத்தம் : வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பைக் கட்டுக்கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவைச் சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.
இரத்தச் சோகை (Anemia) : வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

Loading...
Rates : 0