முடி உதிர்தலை தடுக்க மற்றும் செம்பட்டை நிற முடியை கறுப்பாக மாற்றும் இயற்கை எண்ணை

Loading...

முடி உதிர்தலை தடுக்க மற்றும் செம்பட்டை நிற முடியை கறுப்பாக மாற்றும் இயற்கை எண்ணை

நெல்லிக்காய் சாறு 50 மிலி
சோற்றுக்கற்றாழை சாறு 50 மிலி
வெற்றிலை சாறு 50 மிலி
சின்ன வெங்காயச் சாறு 50 மிலி
கருவேப்பிலைச்சாறு 50 மிலி
மருதானிச் சாறு 50 மிலி
நல்ல மிளகு 20 கிராம்

மேலே குறிப்பிட்ட பொருட்களுடன் ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணையில் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் செம்பட்டை முடி மற்றும் நரை முடி கருப்பாகும்.
முடி உதிர்தல் நிற்கும்.
புழுவெட்டில் முடிவளரும்.
கண்பார்வை தெளிவுபடும்.
தலைவலி குணமாகும்.
உடல்சூடு, மூக்கடைப்பு, கப வியாதிகள், இழுப்பு, இருமல் கட்டுப்படும்.
வழுக்கை தலையிலும் முடி வளரும் என்று கூறுகிறார்கள் ஆனால் அனுபவத்தில் உறுதி செய்யவில்லை. 100% செம்பட்டை முடி கறுப்பாக மாறும் இதை நான் என் அனுபவத்தில் உணர்ந்தது.
செய்முறை:
முதலில் நெல்லிக்காய், வெற்றிலை போன்றவற்றை தனித்தனியாக இடித்து சாறு எடுத்துக்கொண்டு பிறகு எண்ணைய், மிளகு தவிர அனைத்தையும் ஒன்றாக்கி அடுப்பில் வைத்து அவை பாதியாக வற்றியதும் தேங்காய் எண்ணையை கலந்து கலக்கி வைத்து, நீரடங்கி கொதித்ததும் மிளகை தட்டிப்போட்டு இறக்கி, பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.!

Loading...
Rates : 0