மாம்பழத்தின் மறுபக்கம்: அதிர்ச்சியூட்டும் தகவல்

Loading...

மாம்பழத்தின் மறுபக்கம்: அதிர்ச்சியூட்டும் தகவல்

கண்ணை பறிக்கும் நிறத்தில் இருக்கும் மாம்பழத்தை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

என்னதான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், இதனை பழுக்க வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் மனித உடலுக்கு தீங்கினை விளைவிக்கின்றன.
சில மாம்பழங்கள் வெளியே பார்ப்பதற்கு நல்ல மஞ்சள் நிறத்தில் பளபளப்புடன் இருக்கும். வெட்டிப் பார்த்தால் உள்ளே வெள்ளையாகவும் புளிப்பாகவும் இருக்கும்.
கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதன் விளைவுதான் இது. இயற்கையாக மாம்பழத்தில் முதிர்ச்சியடையும்போது எத்திலின் வாயு உற்பத்தியாகி அதனை பழுக்க வைக்கும். பிஞ்சிலேயே பழுக்க வைக்க வேண்டும் என்றால் அசட்டலின் வாயு தேவைப்படுகிறது.
அசட்டலின் வாயுவை வெளியிடும் தன்மை கார்பைட் கல்லுக்கு உண்டு. அடைக்கப்பட்ட அறையினுள் மாம்பழக் கூடைகளை வைத்து, அதனுள் சிறிதளவு கார்பைட் கல்லை பொட்டலமாக்கி வைத்து விடுவர்.
கார்பைட் கற்களிலிருந்து வெளிப்படும் அசட்டலின் வாயு மாம்பழத்தை பழுக்க வைக்கிறது. அசட்டலினும் எத்திலின் குடும்பத்தைச் சேர்ந்த வாயுதான். இப்படிச் செயற்கையாக பழுக்க வைப்பதனால் அதை உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன.

Loading...
Rates : 0