மட்டன் ஈரல் வறுவல்

Loading...

மட்டன் ஈரல் வறுவல்

மட்டன் ஈரல் -கால் கிலோ
இஞ்சி,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
தக்காளி-1
மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
சோம்பு தூள்-1 டேபிள்ஸ்பூன்
மிளகு தூள்-1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
மல்லி தூள் -1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் -அரை மூடி

Step 1
தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கிராம்பு -3 பட்டை -2
Step 2
முதலில் வெங்காயம் ,தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காயை மிக்ஸ்யில்போட்டு அரைத்து கொள்ளவும் .பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்ட பின்பு வெங்காயம் ,தக்காளி ,இஞ்சி,பூண்டு விழுது,சோம்பு தூள் போட்டு நன்கு வதக்கவும்.
Step 3
வதக்கிய பின்பு அதில் மட்டன் ஈரலுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் ,மல்லித்தூள் ,அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.தண்ணீர் சுண்டிய பின் மட்டன் ஈரல் மசாலுடன் மிளகு தூள் போட்டு இறக்கவும்.சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி.

Loading...
Rates : 0