நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

Loading...

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

பொதுவாக நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்தி குறைவினால் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்படுகிறது.

அதிலும் குளிர்காலங்களில் சொல்லவே தேவையில்லை. மிகவும் எளிதாக காய்ச்சல் மற்றும் சளிதொல்லை போன்ற பிரச்சனைகள் நம்மை தாக்குகின்றது.
எனவே நாம் அன்றாடம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு நம்முடையை கைகளை தண்ணீரில் சுத்தமாக கழுவி கொண்டு பின் உணவுகளை சாப்பிட வேண்டும்.
எனவே நாம் எப்போதும் சுத்தமாக இருப்பதன் மூலம் கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
அதுமட்டுமின்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிக்கன் சூப்
சிக்கன் சூப் நமது உடம்பிற்கு மிகவும் பல நன்மைகளைத் தருகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் தாக்கத்தின் மூலம் ஏற்படும் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளை சிக்கன் சூப் தடுக்கிறது.
எனவே இந்த சிக்கன் சூப்பில் சிறிதளவு பச்சை மிளகாய் சேர்த்து தினமும் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தயிர்
தயிரானது நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமான மண்டலத்தின் செயல் திறனை மேம்படுத்துகிறது.
எனவே நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் தயிரை சேர்த்துக் கொண்டு வந்தால், தொற்று நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
கிரீன் டீ
கிரீன் டீயில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காஃபின் மற்றும் ஆன்டியாக்ஸிடன்டுகள் அதிகமாக நிறைந்துள்ளது.
எனவே நாம் தினமும் கிரீன் டீயை குடித்து வந்தால், காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்கள் வராமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.
மீன் மாத்திரை
விட்டமின் D சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் மற்றும் மீன் மாத்திரைகளை நாம் தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.
ஏனெனில் நமது உடம்பில் கிருமிகளின் தாக்கத்தை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை, விட்டமின் D சத்துக்கள் நிறந்த உணவுகள் முற்றிலும் தடுத்து விடுகிறது.
பழங்கள்
நார்ச்சத்து அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை நாம் அன்றாடம் நம்முடைய உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதனால் நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கப்படுகிறது. நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

Loading...
Rates : 0