நடன நடிகரின் இரண்டாவது காதலை முறித்த முன்னாள் காதலி

Loading...

நடன நடிகரின் இரண்டாவது காதலை முறித்த முன்னாள் காதலி

நடன நடிகரின் இரண்டாவது காதலை அவரது முன்னாள் காதலியே முறித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
நடன நடிகரின் சமீபத்திய காதல் விவகாரம் ஊரறிந்ததுதான். வீரமான நடிகையுடன் இவர் நெருக்கமாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்தது. அதன்பின், அந்த காதல் செய்தி பிசுபிசுத்து போய், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இவர்களின் பிரிவுக்கு ஒரு நடிகைதான் காரணம் என்று தற்போது கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
அந்த நடிகை வேறு யாருமல்ல, நடன நடிகரின் முன்னாள் காதலிதானாம். நடன நடிகரை காதலித்து, அவரை கரம் பிடிக்கும் அளவுக்கு சென்று பின்னர் பிரிந்து வந்தவர் நயன நடிகை. இவர்தான் நடன நடிகரின் தற்போதைய காதலுக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நயன நடிகையை காதலிக்கும்போது நடன நடிகர் இயக்கிய படங்கள் எல்லாம் தோல்வியை கண்டன. இதனால், என்ன பண்ணலாம் என்ற யோசனையில் இருந்தவருக்கு நயன நடிகையின் காதல் கைகொடுத்தது. நயன நடிகையின் பணத்தை வைத்து சொந்த படத்தை எடுக்கலாம் முடிவு செய்திருந்த நிலையில், நடிகை சுதாரித்துக் கொண்டு அவரைவிட்டு வெளியே வந்துவிட்டார்.
நடிகையை பிரிந்த சோகத்தில் இருந்த நடன நடிகர் ரொம்ப நாளாக சினிமாவில் தலைகாட்டாமலேயே இருந்தார். ஒருவழியாக மீண்டும் நடிக்க வந்தவர், அந்த படத்தில் நடித்த வீரமான நடிகையுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார். நடிகையும் அவரிடம் நெருக்கம் காட்டவே, ரெண்டு பேருக்குள்ளும் காதல் நோய் தொற்றிக் கொண்டது.
இந்நிலையில், வீரமான நடிகை, நடன நடிகருடன் காதல் வயப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்ததும், உடனே நயன நடிகை வீரமான நடிகைக்கு போன் போட்டு, அந்த நடிகரை காதலித்தால் நீ சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்துவிடுவாய் என்று எச்சரித்தாராம். இதன்பிறகே, வீரமான நடிகை சுதாரித்துக் கொண்டு தற்போது நடன நடிகரை விட்டு சற்று விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

Loading...
Rates : 0