தூக்கத்தை தூண்டும் நிலசம்பங்கி

Loading...

தூக்கத்தை தூண்டும் நிலசம்பங்கி

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். நலம்தரும் நாட்டு மருத்துவத்தில், நிலசம்பங்கி பூவை பயன்படுத்தி தூக்கத்தை தூண்டக்கூடிய மருத்துவம் குறித்து காணலாம். நிலசம்பங்கி பூ அற்புத மருத்துவ குணங்களை கொண்டது. இதன் பூ, இலை, வேர் என அனைத்து பாகங்களும் பயன்தருகிறது. சம்பங்கி பூவின் மணமே மருந்தாகி தூக்கத்தை தூண்ட கூடியதாக அமைகிறது. புண்களை ஆற்றக்கூடியதாக விளங்குகிறது.

நிலசம்பங்கி பூக்களை பயன்படுத்தி தசை, நரம்புகளில் இறுக்கத்தை போக்கி நல்ல தூக்கத்தை தரும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நிலசம்பங்கி, பனங்கற்கண்டு, பால். நிலசம்பங்கி பூக்கள் 5 எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர ஆழ்ந்த தூக்கம் வரும். கைகால் வலி, உடல் வலி சரியாகும். சம்பங்கி மணத்தை உடையது. நல்ல தூக்கத்தை தரக்கூடியது. இந்த பூவை இரவு நேரத்தில் நுகர்ந்தால் தூக்கம் நன்றாக வரும். காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது.
சிறுநீரை பெருக்க கூடியது. பால்வினை நோய்க்கு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. நிலசம்பங்கி கிழங்கை பயன்படுத்தி வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் கல்லீரல், மண்ணீரல் பாதிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சம்பங்கி கிழங்கு, இஞ்சி, பூண்டு. சம்பங்கியின் அடிப்பகுதியில் உள்ள கிழங்கின் மேல்தோலை நீக்கி வெள்ளை பகுதியை பசையாக்கி எடுக்கவும். இதில் இஞ்சி, பூண்டு நசுக்கி போடவும். சிறிது பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இருவேளை குடித்தால் காய்ச்சல் காணாமல் போகும். வியர்வையை தூண்டும். சிறுநீரை வெளித்தள்ள கூடியது. சளி, இருமல் பிரச்னைகள் சரியாகும்.
சம்பங்கி பூக்கள் குளிர்ச்சி தரக்கூடியது. இதன் கிழங்குப் பகுதி உள்மருந்தாகி கடுமையான காய்ச்சலை போக்க கூடியது. நடுக்கம் தருகின்ற குளிரால் ஏற்படும் காய்ச்சல், வயிறு வலி, மலேரியா, டைபாய்டு காய்ச்சலால் மண்ணீரல் கெட்டுவிட வாய்ப்புள்ளது. இதற்கு சம்பங்கி கிழங்கு தேனீர் மருந்தாகிறது.
சம்பங்கி பூக்களை பயன்படுத்தி வறண்ட சருமம், சிராய்ப்பு காயம், பாதவெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். சம்பங்கி பூக்களின் இதழ்களை மட்டும் நசுக்கி எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சவும்.
இதை வடிக்கட்டி எடுத்து பாதவெடிப்புக்கு மேல்பூச்சாகவும், குளியல் தைலமாகவும் பயன்படுத்தலாம். சிராய்ப்பு காயங்கள், லேசான தீ காயங்கள், அடிபட்ட காயங்கள் மீது தடவுவதால் வடு தெரியாமல் ஆறும். சம்பங்கி நுண்கிருமிகளை அழிக்க கூடியது. புண்களை ஆற்றக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சம்பங்கி பூவை பசையாக்கி சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து தடவினால் முகப்பரு மறையும். எண்ணெய் பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் அஜீரணம், வயிறு உப்புசத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். செரிமானம் ஆகாததால் வயிற்று கோளாறுகள் ஏற்படுகிறது. சிறிது சுக்கு பொடி, பெருங்காய பொடியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது வயிற்றுகோளாறுகள் விலகி போகும்

Loading...
Rates : 0