சுவையான ஸ்நாக்ஸ் வாழைப்பூ போண்டா

Loading...

சுவையான ஸ்நாக்ஸ் வாழைப்பூ போண்டா

தேவையான பொருட்கள் :
உளுந்து – கால் கிலோ
வாழைப் பூ – ஒன்று (நடுத்தரமான அளவு)
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை – ஓரு கொத்து
தேங்காய் – அரை கப்
மிளகு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :
* உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
* தேங்காயுடன் மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து மாவை போட்டு அதனுடன் அரைத்த தேங்காய், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான வாழைப்பூ போண்டா தயார். தேங்காய் சட்னிடன் பரிமாறவும்

Loading...
Rates : 0