கோலா உருண்டைக் குழம்பு

Loading...

கோலா உருண்டைக் குழம்பு

துவரம் பருப்பு – 3/4 கப்,
உளுத்தம் பருப்பு – 1/4 கப்,
காய்ந்த மிளகாய் – 8,
சீரகம் – 1 டீஸ்பூன்,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 8-10 (பொடியாக நறுக்கவும்),
சின்ன வெங்காயம் – 1 கப்.
தாளிக்க…
எண்ணெய் – 1/4 கப்,
கடுகு-1 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
தக்காளி – 1/4 கிலோ,
மிளகாய்த் தூள் – 4-5 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கறிவேப்பிலை – 1 பிடி,
தேங்காய் – பாதி தேங்காய்,
புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு.

பருப்பு வகைகளை 1 மணி நேரமாவது ஊறவைத்துப் பின் இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிகவும் கெட்டியாக அரைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/4 கப், பூண்டு, துருவிய தேங்காய் அனைத்தையும் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
குழம்பு: கடாயில் எண்ணெயை காயவைத்து, பெருங்காயம், கடுகு, வெந்தயம், சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். அதன்பின் புளிக்கரைசலை விட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, தயாராக உள்ள உருண்டைகளைப் போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும். உருண்டைகள் மேலே எழும்பி வந்ததும் கீழே இறக்கி வைத்துப் பரிமாறவும்.
குறிப்பு: குழம்பு நன்றாகக் கொதி வந்தவுடன் உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டுக் கொதிக்க விடவும். கேஸை சிம்மில் வைத்துக் கொதிக்க வைத்தால் உடையாது. தென்னிந்திய மாவட்டங்களில் பிரபலமான ஒன்று.

Loading...
Rates : 0