கொள்ளு ரசம்

Loading...

கொள்ளு ரசம்

கொள்ளு – 1 கப்,
புளி – ஒரு எலுமிச்சை அளவு,
உப்பு-தேவைக்கு.
விழுதாக அரைக்க…
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
ரசப்பொடி – 4 டீஸ்பூன்,
பெருங்காயம் சிறிது.

தாளிக்க…
நெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
குக்கரில்கொள்ளுவை 3 மடங்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்த கொள்ளு தண்ணீரை பிழிந்தெடுத்து வைக்கவும். புளிக்கரைசலில், உப்பு, பெருங்காயம், ரசப்பொடி சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். அரைத்த மிளகு சீரக விழுது, கொள்ளு தண்ணீரையும் சேர்த்துக் கலந்து ரசத்தில் விடவும். மிதமான தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். நுரைத்து மேலெழும்பி வரும்போது கீழே இறக்கி வைத்து, மற்றொரு கடாயில் நெய் ஊற்றி கடுகு தாளித்து ரசத்தில் கொட்டி சுடச்சுடப் பரிமாறவும்

Loading...
Rates : 0