காலில் உண்டாகும் சுளுக்கை சுலபத்தில் குணமாக்க 3 வழிகள்

Loading...

காலில் உண்டாகும் சுளுக்கை சுலபத்தில் குணமாக்க 3 வழிகள்

சுளுக்கு உடலில் ஏற்படும் சிறி பிரச்சனைகளில் ஒன்று. ஓடியாடும் போதும் , விழும்போதும் அவ்வப்போது இப்படி பிசகும். ஆனால் நடப்பதற்கு முடியாதபடி வலிக்கும். அதனை குணப்படுத்த 2 வழிகள் இங்கே.

லேசாக பாதம் பிசகினாலே கணுக்காலில் சுளுக்கு உண்டாகும். அங்கே சதை அதிகம் இல்லாததால் தோலை ஒட்டிய தசை நார்களில் பாதிப்பு உண்டாகி எளிதில் நரம்புகள் இன்றோடொன்று பிணைந்து இறுக்கத்தை உண்டாக்கும். இதனை சுளுக்கு என்று நாம் கூறுவோம்.
அது எளிதில் போகாது. அதுவாகவே போனால்தான் உண்டு. மாத்திரை மருந்துகள் பலனைத் தராது. எவ்வாறு அதனை சரிசெய்வது என தெரிந்து கொள்வதில் விருப்பமா? கீழே உள்ள யுக்திகளை முயற்சித்துப் பாருங்கள்
கல் உப்பு பற்று : அரை கரண்டி நல்லெண்ணெயை பொறுக்கும் அளவில் சூடு படுத்தி அதில் கைப்பிடி கல் உப்பை போட வேண்டும். இதனை ஒரு நல்ல பருத்தி துணியில் போட்டு இறுக்கமாக கட்டி அதனைக் கொண்டு ஒத்தடம் தர வேண்டும். அவ்வப்போது அதனை வெதுவெதுப்பாக சூடு படுத்தி ஒத்தடம் தாருங்கள்.
கல் உப்பு பற்று : பின்னர் இரவில் இந்த கலவையை காலில் படும்படி பற்று போல் கட்டி வைத்துவிடுங்கள். சுளுக்கு விரைவில் மறைந்துவிடும்.
ஐஸ் கட்டி ஒத்தடம் : இது தசைகளில் உண்டாகும் இறுக்கத்தை தளர்க்கிறது. இதனால் நரம்புகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. சுளுக்கு விரைவில் குணமாகும்.
ஐஸ் கட்டி ஒத்தடம் : ஐஸ் கட்டியை சுளுக்கு இருக்குமிடத்தில் ஒற்றி எடுங்கள். . 5-10 நிமிடம் இடைவெளிவிட்டு ஒத்தடம் கொடுங்கள். தேய்க்க வேண்டாம். தினமும் ஒரு மணி நேர இடைவெளியில் இப்படி செய்தால் விரைவில் சுளுக்கு சரியாகிவிடும்.
எப்சம் உப்பு : இன்னொரு எளிதான் வழி இது. அரை பக்கெட் நீரை வெதுவெதுப்பான சூட்டில் எடுத்துக் கொள்ளுங்கள்.
எப்சம் உப்பு : 2-3 ஸ்பூன் எப்சம் உப்பை அதில் கலக்குங்கள். இந்த நீரில் உங்கள் கால்களை அமிழ்த்துங்கள். 15 நிமிடம் கழித்து எடுக்கவும். தினமும் இருவேளை இப்படி செய்தால் சுளுக்கு குணமாகும்.

Loading...
Rates : 0