கஸ்டர்ட் பவுடர் குக்கீ

Loading...

கஸ்டர்ட் பவுடர் குக்கீ

மைதா மாவு – 3/4 கப்,
கஸ்டர்ட் பவுடர் – 1/2 கப்,
ஐசிங் சுகர் – 1/4 கப்,
வெண்ணெய் – 1/2 கப்.

எப்படிச் செய்வது?
மைதா மற்றும் கஸ்டர்ட் பவுடர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து இரண்டு முறை சலிக்கவும். வெண்ணெயை பீட்டர் அல்லது விஸ்க் கொண்டு நன்கு நுரைக்க அடித்து, அதனுடன் ஐசிங் சுகர் சேர்த்து மீண்டும் நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும். இப்பொழுது சலித்து வைத்துள்ள மாவுக் கலவை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். மாவிலிருந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்பு ஃபோர்க் வைத்து ஒரு முறை அழுத்தி விடவும். அவனை 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும். 180 டிகிரி செல்சியஸில் 9 நிமிடங்கள் பேக் செய்யவும். நன்கு ஆறிய பின்பு எடுத்து வைக்கவும்

Loading...
Rates : 0