கத்தரிக்காய் ரைஸ் செய்வது எப்படி

Loading...

கத்தரிக்காய் ரைஸ் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :
சாதம் – 1 கப்,
பிஞ்சுக் கத்தரிக்காய் – 6,
வெங்காயம்- ஒன்று,
கடுகு – கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* அதன் பிறகு இதில் இஞ்சி – பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து, வதக்கவும்.
* கத்தரிக்காய் பாதியளவு வெந்ததும் கரம்மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும்.
* கத்தரிக்காய் வெந்து மணம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இந்தக் கலவையில் சூடான சாதம், நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.

Loading...
Rates : 0