கத்தரிக்காய் க்ரிஸ்பி ஃப்ரை

Loading...

கத்தரிக்காய் க்ரிஸ்பி ஃப்ரை

இத இரண்டு முறையில் செய்யலாம்.
1.தவா வில் கொஞ்சமா எண்ணெய் உற்றி சேலோ ப்ரை செய்யலாம்.
2. ஓவனில் கிரில் மோடில் வைத்தும் செய்யலாம். மேலும் இதை பார்பிக்யு கிரில்லிலும் செய்யலாம்.
ஒரு அலுமினியம் பாயிலை பார்பிக்யு கிரில்லின் மேல் வைத்து ,லேசாக எண்ணெய் தடவி , பின் மசாலா தடவிய துண்டுகளை போட்டு அவ்வப்போது இரண்டு பக்கமும் திருப்பி போட்டு லேசாக எண்ணெய் தடவி முறுகலாக வேகவைத்து சாபிட்டால் அருமையாக இருக்கும்.
சரி எப்படி செய்யணும்னு பாப்போம்…..

தேவையானவை
பெரிய கத்தரிக்காய் – 1
கடலை எண்ணெய் – 2-3 தேக்கரண்டி
அரிசி மாவு – 2 டேபுள்ஸ்பூன்
மசாலாவிற்கு தேவையானவை
தயிர் – 1-2 தேக்கரண்டி
இஞ்சி துருவல் – ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் –¼ தேக்கரண்டி
மிளகுத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – ½ தேக்கரண்டி
சாட் மசாலா – ½ தேக்கரண்டி
அலங்கரிக்க
பச்சை கொத்தமல்லி – 2 தேக்கரண்டி (பொடியாக அறிந்தது)
எலுமிச்சை – பாதி
செய்முறை
முதலில் மசாலாவிற்கு தேவையானவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும்.
பின் கத்தரிக்காய் வட்டமாகவோ நீலமாகவோ 1/2 இஞ்ச் துண்டுகளாக வெட்டி இரண்டு பக்கமும் லேசாக கீறிவிடவும்.
இரண்டு பக்கமும் கலந்து வைத்த மசாலாவை தடவி வைக்கவும்.
பின் அரசிமாவில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் ரெடியாக வைக்கவும்.
ஒரு கடாய் , அல்லது தோசைக்கல்லில் சிறுது எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் கத்தரிக்காயை போட்டு, மொரு மொறுப்பாகவும், பொன்னிறமாகவும் மாறும் வரை வறுத்து எடுக்கவும்.
அவனில் செய்வதாக இருந்தால் முதலில் கத்தரிக்காயை தவாவில் போட்டு இரண்டு பக்கமும் மசாலா நன்றாக ஒட்டிக்கொண்ட பிறகு, அதை ஒரு தட்டில் பரப்பி வைத்து, அவனில் க்ரிச்பாக வேகும் வரை விட்டு பின் எடுத்து பரிமாறவும்… முதலிலேயே அவனை 400 டிகிரி முற்சூடு செய்யவும்.
இந்த தட்டை ஒவனில் வைத்து 20 நிமிடங்கள் வைக்கவும்.கத்தரிக்காயை 10 நிமிடம் ஒரு பக்கமும், பின்னர் 10 நிமிடம் மற்றொரு பக்கமும் திருப்பி விடவும். நல்ல கிரிஸ்பியான கத்தரிக்காய் ரெடி.

Loading...
Rates : 0