ஒக்காரை

Loading...

ஒக்காரை

கடலைப் பருப்பு – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
நெய் – 1/2 கப்,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – சிறிது.
பாகிற்கு:
வெல்லம் – 2 கப்,
தண்ணீர் – 1 கப்.

கடலைப் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, சிறிதளவுகூட தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைக்கவும். அடிகனமான கடாயில் நெய்யை சூடாக்கிப் பின் அரைத்த பருப்பை கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சவும். சிறிது கொதித்ததும், பருப்பின் மேல் கொட்டி கைவிடாமல் கிளறவும். ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த தேங்காய்ப் பல் சேர்த்து பரிமாறவும்

Loading...
Rates : 0