பச்சை பாசிப்பருப்பு சீயம்

Loading...

பச்சை பாசிப்பருப்பு சீயம்

மேல் மாவிற்கு…
இட்லி அரிசி – 1/2 கப்,
உளுத்தம்பருப்பு – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு.
பூரணத்திற்கு…
பச்சை பாசிப்பருப்பு – 1/4 கப்,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
வெல்லம் – 1/4 கப் + 2 டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை,
ஏலக்காய்தூள் – 1/2 டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?
இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து 2 மணி நேரம் ஊற வைத்து, நன்கு வடிகட்டி, கெட்டி மாவாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். மேல் மாவு ரெடி! பச்சை பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3-4 விசில் வரும்வரை வைத்து, வெந்ததும் நன்கு வடிகட்டி ஆற வைத்து, அதில் தேங்காய்த்துருவல், வெல்லம், நெய், உப்பு, ஏலக்காய்தூள் சேர்த்து அரைக்கவும். பின் உருண்டையாக செய்து எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, உருண்டைகளை கலந்து வைத்த மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். நெய்யுடன் பரிமாறவும்.

Loading...
Rates : 0